மகனுக்கு ஆதரவாக ஓபிஎஸ் பிரசாரம்

அலங்காநல்லூர்: தேனி நாடாளுமன்ற தொகுதியில் பாலமேடு அருகே உள்ள வலையபட்டி மஞ்சமலை சுவாமி கோவிலில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்ம் சாமி கும்பிட்டார். பின்னர் திறந்த வேனில் பாலமேடு, அலங்காநல்லூர், சுற்று வட்டார கிராமங்களில் மகனுக்கு அவர் ஆதரவு திரட்டினார். 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், “அதிமுக சார்பில் தகுதியான வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களை நிச்சயம் மக்கள் ஏற்றுக்கொண்டு வெற்றிபெறச் செய்வார்கள். தமிழக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரிப்போம்,” என்றார்.