கடும் நெருக்கடியில் அதிமுக

சென்னை: ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள இடைத்தேர்த லில் பல சூழ்ச்சிகளைக் கையாண்டு வந்தபோதிலும் சூலூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கனகராஜின் மரணம் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி இருக் கிறது.  
பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது அதிமுக அரசு. 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம், திருவாரூரில் கரு ணாநிதி மறைவு, ஓசூர் எம்எல்ஏ பாலகிருஷ்ணா ரெட்டி தண்டனை பெற்றது, திருப்பரங்குன்றம் எம்எல்ஏ போஸ் மரணம் என 21 தொகுதிகள் காலியாக இருந்த நிலையில் தற் போது சூலூர் அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மரணம் என மொத்தம் 22 தொகுதிகள் காலியாக உள் ளன. 
இவற்றில் 18 தொகுதிகளுக் கான பிரசாரம் தீவிரமாக நடை பெற்று வருகிறது. ஏற்கெனவே பெரும்பான்மைக்காகத் திண்டாடி வரும் அதிமுக அரசு சட்டமன்ற இடைத்தேர்தலில் 8 இடங்களில் அவசியம் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. இந்நிலை யில் கனகராஜ் மரணத்தால் இந்த எண்ணிக்கை 9 ஆக அதிகரித்து விட்டது. அதாவது 18 தொகுதி களில் பாதிக்குப் பாதி 9ல் வெற்றி பெற்றால்தான் எடப்பாடி அரசு நிலைக்கும்.
தற்போதைய நிலவரப்படி பெரும் பான்மையை நிரூபிக்க 110 உறுப் பினர்களின் ஆதரவு எடப்பாடி அர சுக்குத் தேவை. ஆளும் அதிமுக வுக்கு ஆதரவாக, சபாநாயகர் நீங் கலாக, 109 எம்எல்ஏக்கள் இருந் தனர். அறந்தாங்கி எம்எல்ஏ ரத் தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகியோர் தினகரனின் ஆதரவா ளர்களாக இருப்பதால் அவர்களை யும் தினகரனையும் சேர்த்தால் அந்த அணியில் 4 பேர் உள்ளனர்.
தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோர் தங்கள் நிலைப்பாடு குறித்து தெளிவாக அறிவிக்கவில்லை. 
இதுவரை ஆபத்து இல்லாமல் தப்பி வந்த அதிமுக அரசுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு ஆபத் தாக வந்துள்ளது. 18 தொகுதி களின் தேர்தல் முடிவு வந்தால் உறுப்பினர்களின் எண்ணிக்கை 230 ஆக இருக்கும். ஆக ஆட்சி யமைக்க எடப்பாடி அரசுக்கு 116 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இப்போது உள்ள 107 உறுப்பினர் களோடு 9 பேர் வெற்றிபெற்றால் மட்டுமே ஆட்சியைத் தக்கவைக்க முடியும் என்ற நெருக்கடி நிலை அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.
அதிமுகவின் வெற்றியின் குறுக்கே டிடிவி தினகரன் இருப் பது குறிப்பிடத்தக்கது.