மோடிதான் எம்ஜிஆர்; அமித்ஷா தான் ஜெயலலிதா: ஸ்டாலின் நையாண்டி

தஞ்சாவூர்:  மதச்சார்பற்ற கூட்டணி வேட் பாளர்கள் அறிமுகம் மற்றும் பிரசார பொதுக் கூட்டம் தஞ்சை திலகர் திடலில் நடை பெற்றது. அந்தக் கூட்டத்தில் மக்களவை வேட்பாளர்கள் தஞ்சாவூர்- பழனிமாணிக் கம், மயிலாடுதுறை-செ.ராமலிங்கம், தஞ்சை சட்டமன்ற வேட்பாளர் நீலமேகம் ஆகி யோரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். 
பின்னர் கூட்டத்தில் பிரசார உரையாற் றிய ஸ்டாலின், “அதிமுக ஆட்சியில் கொள்ளை, கொலை, லஞ்சம், ஊழல்தான் நடந்து வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்ததும் முன்னாள் முதலமைச்சர் ஜெய லலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும். குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள். யார் தடுத்தாலும் இதனை விடமாட்டேன். 
“எடப்பாடிக்கும் ஓபிஎஸ்ஸுக்கும் எம்ஜி ஆரைப் பற்றியோ ஜெயலலிதாவைப் பற்றியோ கவலை இல்லை. அவர்களுக்கு மோடிதான் எம்ஜிஆர்; அமித் ஷாதான் ஜெயலலிதா. ஏனென்றால், இந்த ஊழல் கும்பலை காப்பாற்றுவது அந்த ரஃபேல் கும்பல்தான்,” என காரசாரமாகப் பேசி னார் ஸ்டாலின்.