கனிமொழிக்கு வாக்கு  கேட்ட அதிமுக வேட்பாளர்

விளாத்திகுளம்: தூத்துக்குடி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கனிமெழியை எதிர்த்து பாஜக சார்பில் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடவிருப்பதாகக் கூறப்படுகிறது. இந் நிலையில், விளாத்திகுளம் பகுதியில் பிரசாரம் செய்த அதிமுக சட்டமன்ற வேட்பாளர் சின்னப்பன், தமிழிசைக்கு வாக்கு சேகரிப் பதற்குப் பதிலாக கனிமெழியின் பெயரைக் கூறி வாக்கு சேகரித்தார். பின்னர் சுதாரித்துக் கொண்ட சின்னப்பன், தமிழிசையின் பெயரைக் கூறி சமாளித்தார். அதிமுக வேட்பாளரின் இந்தப் பேச்சு பாஜக-அதிமுக கூட்டணிக் கட்சியினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.