சென்னை: அதிமுகவும் திமுகவும் தங்கள் தேர்தல் அறிக்கை யில் மாணவர்களின் கல்விக் கடனும் விவசாயிகளின் பயிர்க்கடனும் அடியோடு ரத்து செய்யப்படும் எனத் தெரிவித் துள்ளன. இதனால் தேர்தலுக்குள் இயன்றவரை கடன் தொகையை வசூலிக்கும் முயற்சியில் வங்கி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக விவசாயி ஒருவர் கூறு கையில், "அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதியில் கடன் களை ரத்துசெய்வதாக அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக் கிறது. ஆனால், இதுவரை கைபேசி வாயிலாக மட்டுமே தொடர்புகொண்டு கடன்களைக் கட்ட வலியுறுத்தி வந்த வங்கி அலுவலர்கள் தேர்தல் அறிக்கை வெளியான நாளி லிருந்து வீடுதேடி வரத் தொடங்கியுள்ளனர்," என்றார்.
விவசாயிகளுக்கு மகிழ்ச்சி; வங்கி அதிகாரிகளுக்கு அதிர்ச்சி
1 mins read

