போட்டியிடாமல் எம்பி; போட்டியிட்டு தோல்வி

போட்டியிடாமல் எம்பி; போட்டியிட்டு தோல்வி

1 mins read
674a3372-78d9-498a-bf44-d7dc6662452c
தமிழிசை சௌந்தரராஜன் - கனிமொழி -

இந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்களின் கவ னத்தை ஈர்க்கக்கூடிய தொகுதி களில் முதன்மையானதாக தூத் துக்குடி விளங்குகிறது. இது வரை எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடாமல் இருமுறை மாநி லங்களவை உறுப்பினராக ஏம் எல்ஏக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட கனிமொழி இங்கு திமுக வேட்பாளராக களமிறங்கி இருப் பதும் அவரை எதிர்த்து பாஜக சார்பில் தமிழிசை சௌந்தரராஜன் நிறுத்தப்பட்டிருப்பதும் அதற்கான காரணங்கள். இவ்விருவரும் இத்தொகுதிக்கு புதுமுகங்கள். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பாஜகவுக்கும் அதிமு கவுக்கும் எதிரான அலை வீசு வதைக் கவனத்தில் கொண்டு வெற்றிபெறும் முழுநோக்கோடு கனிமொழி அங்கு நிறுத்தப்பட்டு உள்ளார். சாதி ரீதியான காரண மும் சொல்லப்படுகிறது.

அதே சாதி ரீதியான காரணம் தான் தமிழிசைக்கும் கூறப்படுகி றது. அதைத்தவிர தமிழிசைக்குச் சாதகமான அம்சம் அத்தொகுதி யில் தேடப்பட்டு வருகிறது. 2006ஆம் ஆண்டு ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் முதல் முறை களமிறங்கிய தமிழிசை தோல்வியைத் தழுவினார். 2009ல் வடசென்னை நாடாளு மன்றத் தொகுதியில் அவர் நின்ற போதும் தோல்வி தொடர்ந்தது. பின்னர், 2011ல் வேளச்சேரி சட்டமன்ற வேட்பாளராகப் போட்டி யிட்ட தமிழிசை, அங்கும் தோல் வியையே தழுவினார். இந்த மூன்று தேர்தல்களிலும் பாஜக தனித்துப் போட்டியிட்டதும் 5 விழுக்காட்டு வாக்குகளைக்கூட தமிழிசை வாங்கவில்லை என்பதும் கவனத்திற்குரிய அம்சங்கள்.