கட்சி தாவும் தலைகளுக்கு திமுக வாய்ப்பு தருவதாக உறுதி

சென்னை: பல்வேறு கட்சிகளில் இருந்தும் திமுகவில் இணைந்த முக்கிய பிரமுகர்களுக்கு அக் கட்சி முக்கிய உத்தரவாதங்களை அளித்து வருகிறது. இதனால் புதிதாக ஏராளமானோர் திமுக விற்குத் தாவுவதற்கு முடிவு செய் துள்ளதாகக் கூறப்படுகிறது. 
நாடாளுமன்றத் தேர்தல், சட்ட மன்ற இடைத்தேர்தலில் அதிமுக, அமமுகவில் ‘சீட்’ கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ள முக்கிய பிரமுகர்கள் திமுகவிடம் பேரம் பேசியுள்ளனர். 
அவர்களைத் திருப்திப்படுத் தும் வகையில் அவர்களுக்கு திமுக சார்பில் வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளதாகவும் கூறப் பட்டுள்ளது.  
அமமுகவின் செந்தில் பாலாஜி, கலைராஜன், அதிமுக வின் ராஜகண்ணப்பன் ஆகி யோருக்கு வாய்ப்பளிப்பதாக திமுக தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.   
அமமுகவில் மாவட்ட செயலர் பதவி வகித்த முன்னாள் அமைச் சர் செந்தில்பாலாஜி, அக்கட்சி துணைப் பொதுச்செயலர் தின கரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திமுகவில் இணைந்தார்.
அவருக்கு அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்படும் என திமுக உறுதி அளித்துள்ளது.
அதேபோல் முன்னாள் அமைச் சர் ராஜகண்ணப்பனுக்கு ராமநாத புரம் நாடாளுமன்றத்தொகுதியில் போட்டியிட அதிமுகவில் வாய்ப்பு அளிக்கவில்லை. 
அதிருப்தி அடைந்த அவருக்கு அடுத்த சட்டமன்றத் தேர்தலில் ‘சீட்’ வழங்குவதாக  திமுக உறுதி கூறியுள்ளது. திமுகவுக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் ஆதர வாக கண்ணப்பன் பிரசாரம் செய்ய உள்ளார்.
அதேபோல், அமமுகவில் மாவட்ட செயலாளராக இருந்தவர் கலைராஜன். இவர் மத்திய சென் னையில் போட்டியிட விரும்பினார். ஆனால் அது கூட்டணி கட்சியான எஸ்டிபிஐக்கு அளிக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த கலைராஜன், திமுகவில் இணைந் தார். இவருக்கும் அடுத்த சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என்று திமுக உத்தரவாதம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்தல் நேரத்தில் இதுபோன்ற கட்சி மாறும் நிகழ்வுகள் சம்பந்தப் பட்ட கட்சிகளுக்குப் பின்ன டைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. 

செந்தில் பாலாஜிக்கு (சால்வையுடன்) அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்படும் என ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். படம்: தமிழக ஊடகம்