ஓபிஎஸ் மகனுடன் தங்க தமிழ்ச்செல்வன் போட்டி

தேனி: தேனி மக்களவைத் தொகுதியில்  ரவீந்திரநாத் குமாரும் தங்கத் தமிழ்ச்செல்வ னும் நேருக்கு நேர் மோதுவதால் தேர்தல் களத்தில் பரபரப்பு நிலவு கிறது.
தேனியில் அமமுக வேட்பாளர் தங்கத் தமிழ்ச்செல்வன் கள மிறங்க உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளதை அடுத்து, அதிமுக சார்பில் களம் காணும் ஓ. பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு நெருக்கடி ஏற்பட் டுள்ளதாக அரசியல் பார்வை யாளர்கள் தெரிவித்துள்ளனர்.
துணை முதல்வர் ஓபிஎஸ்ஸின் சொந்த ஊரான தேனி தொகுதி யில் தனது மகன் ரவீந்திரநாத் குமாருடன் இணைந்து  அவர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
14 மக்களவை, 9 சட்டமன்றத் தொகுதிகளுக்கான 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை அமமுக வின்  துணைப் பொதுச் செய லாளர் டிடிவி தினகரன் நேற்று வெளியிட்டார். 
இதில் தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளராக தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ தங்கத் தமிழ்ச்செல்வன் அறி விக்கப்பட்டுள்ளார்.
 துணை முதல்வரின் சொந்த தொகுதியான தேனியில் ஓபிஎஸ் ஸின் மகனைத் தோற்கடிப்பதன் மூலம் ஓ. பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்க்கையில் சறுக் கல் ஏற்படுத்தலாம் என்பதே தின கரனின் திட்டம். 
இதனாலேயே அவர் தேனியில் பலம் வாய்ந்த தமிழ்ச்செல்வனை களமிறக்குவதாக விவரமறிந்தவர் கள் கூறுகின்றனர்.
தென்மாவட்டங்களில் அதி முகவுக்கு மிகவும் செல்வாக்கு பெற்ற தொகுதியாக இருப்பது தேனி. அதை கைப்பற்றுவதன் மூலம் அதிமுக கட்சிக்குள் தனது ஆளுமையை செலுத்தலாம் என்பதும் தினகரனின் திட்டம் என்பது மற்றொரு சாரார் கருத்து. 
செய்தியாளர்களைச் சந்தித்த தங்கத் தமிழ்ச்செல்வன் கூறுகை யில், “தேனியில் டிடிவி தின கரனை தெரியாதவர்கள் யாரும் கிடையாது. இப்பகுதிக்காக அவர் நன்கு உழைத்துள்ளார். எனினும், ஓ. பன்னீர்செல்வத்தின் பங்கும் பெரியளவில் உள்ளது. இதையும் அமமுக நன்கு அறியும். மக்களை நம்பியே இத்தேர்தலில் போட்டியிடு கிறேன்,” என்று தெரிவித்தார்.
ரவீந்திரநாத் குமார் கூறிய போது, “இத்தொகுதியில் யார் போட்டியிட்டாலும் அதிமுக வெற்றிபெறும். அதிமுகவின் பிர சார யுக்தி எதிர்முனைப் போட்டி யாளர்களுக்குப் பதில் கொடுக் கும்,” என்று கூறியுள்ளார்.