தமிழகத்தில் சூடுபிடிக்கிறது வாக்கு சேகரிக்கும் உத்தி; சுதீஷை ஆதரித்து முதல்வர் பிரசாரம் 

கள்ளக்குறிச்சி: தமிழகத்தின் மூளை முடுக்குகள் எங்கும் வாக்கு சேக ரிப்பு பணியும் பிரசாரமும் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. 
தமிழகம், புதுச்சேரியில் 40 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 18ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இத் துடன் தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 சட்டமன்ற தொகுதி களுக்கும் தேர்தல் நடத்தப்பட வுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பல்வேறு பகுதி களிலும் தங்களது வேட்பாளர் களுக்கு ஆதரவாக வாக்குகள் சேகரிக்கும் பணியில் அரசியல் கட்சியினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் தனது பிரசாரத்தை நேற்று துவங்கிய முதல்வர் பழனி சாமி, கூட்டணி கட்சியான தேமுதிக வேட்பாளர் எல்கே சுதீ ‌ஷுக்கு ஆதரவாக திறந்தவேனில் நின்றபடி பிரசாரம் செய்தார். 
 அவர் பேசியபோது, “நாட்டில் நிலையான ஆட்சி இருந்தால்தான் மக்கள் நிம்மதியாக வாழமுடியும். எதிரிகளைத் தூள்துளாக்கும் தைரியம் மோடியிடம் உள்ளது. நாட்டைப் பாதுகாக்க பிரதமர் மோடியால்தான் முடியும்,” என்றார்.  
திருச்சி மாவட்டம், மணப்பாறை யில் கரூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரை பேசியபோது, தான் ஒரு சாதாரண தொண்டன்தான் எனவும் இந்தத் தேர்தலில் கிடைக்கும் வெற்றி அடிப்படை அதிமுக தொண்டனின் வெற்றி எனவும் தெரிவித்தார்.
கன்னியாகுமரி  தொகுதியில் பாஜக வேட்பாளராக மீண்டும் போட்டியிடும் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ் ணன் நாகர்கோயிலில் பேசிய போது, 50 ஆண்டுகளில் செய்ய முடியாத பல திட்டங்களை நிறை வேற்றி உள்ளதாகக் கூறினார்.
சென்னை அரும்பாக்கத்தில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சாம் பாலை அறிமுகம் செய்து பிரசாரம் செய்துள்ளார் ராமதாஸ்.