கார்த்தி சிதம்பரத்தைக் களமிறக்க யோசிக்கும் காங்கிரஸ்

தமிழகத்தில் அடுத்த மாதம் 18ஆம் தேதி நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங் கிரஸ் கட்சி, திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது.
மொத்தம் ஒன்பது இடங்களில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி, அதில் சிவகங்கை தொகுதி தவிர்த்து மற்ற எட்டு இடங்களுக் கான வேட்பாளர்களை நேற்று முன்தினம் அறிவித்தது.
அதன்படி, திருவள்ளூரில் டாக்டர் கே.ஜெயக்குமார், திருவள் ளூரில் டாக்டர் ஏ.செல்லக்குமார், ஆரணியில் டாக்டர் எம்.கே. விஷ்ணு பிரசாத்,  கரூரில் ஜோதி மணி, திருச்சியில் எஸ்.திருநாவுக் கரசர், தேனியில் ஈவிகேஎஸ் இளங்கோவன், விருதுநகரில் மாணிக்கம் தாகூர், கன்னியா குமரியில் எச்.வசந்தகுமார் ஆகி யோர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
ஆயினும், சிவகங்கை தொகு திக்கு மட்டும் அக்கட்சி வேட் பாளரை அறிவிக்காதது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப் பாகப் பேசப்படுகிறது. 
அத்தொகுதியில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம்  (படம்) களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப் படும் முன்பே கார்த்தி சிதம்பரம் அங்கு களப்பணிகளை முடுக்கி விட்டிருந்தது அதை உறுதிப் படுத்தும் விதத்தில் இருந்தது.
இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பலரது ஆதரவு இருந்தாலும் டெல்லி தலைமை கார்த்தியை வேட்பாள ராக அறிவிக்க யோசிப்பதாகச் சொல்லப்படுகிறது.
“காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கார்த்தி சிதம்பரத்திற்கு எப்போதுமே விரும்பி பொறுப்பு களைக் கொடுத்ததில்லை. அத் துடன், சில வழக்குகளிலும் சிக்கி இருப்பதால் இம்முறை அவரை வேட்பாளராகக் களமிறக்க கட்சித் தலைமை தயங்குகிறது,” என்று காங்கிரஸ் வட்டாரங்கள் கூறின.
கடந்த 2014 பொதுத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டி யிட்ட கார்த்தி சிதம்பரம் கிட்டத்தட்ட 150,000 வாக்குகளைப் பெற்றார். காங்கிரஸ் கட்சி தனித்து நின்ற போதே அவர் இவ்வளவு வாக்கு களைப் பெற்றதைச் சுட்டிய சிலர், இம்முறை கூட்டணி வைத்துப் போட்டியிடுவதால் அவர் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கூறினர்.
ஏழு முறை சிவகங்கை தொகு தியின் எம்.பி.யாக இருந்துள்ள ப.சிதம்பரம், இப்போது மகாராஷ் டிர மாநிலத்தில் இருந்து நாடாளு மன்ற மேலவை எம்.பி.யாக இருக் கிறார். மேலவை எம்.பி., மாநில அமைச்சர்கள் ஆகியோரின் வாரிசுகளுக்கு தேர்தலில் போட்டி யிட வாய்ப்பு வழங்குவதில்லை என்பது காங்கிரசின் நிலைப்பாடு. அதனால்தான் கார்த்தி சிதம்பரத் திற்கு வாய்ப்பு வழங்க காங்கிரஸ் மேலிடம் யோசிப்பதாக ஒருசாரார் கூறுகின்றனர்.
அதேபோல, எம்எல்ஏவாக இருப்பவருக்கு எம்.பி. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவது இல்லை என்பதும் காங்கிரஸ் தலைமையின் நிலைப்பாடுதான். ஆயினும், நாங்குநேரி எம்எல்ஏ வாக இருக்கும் வசந்தகுமார் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக நிறுத்தப் பட்டுள்ளார். 
வெற்றி வாய்ப்பைக் கருதி அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆகையால், கார்த்தி சிதம்பரம் விஷயத்திலும் அதே நிலைப் பாட்டை எடுக்க வேண்டும் என்று அவரின் ஆதரவாளர்கள் வலி யுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே, சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரத் தின் மனைவி ஸ்ரீநிதி நிறுத்தப்பட லாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
2019-03-24 06:10:00 +0800

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கரும்புச்சாறு கடை வைத்திருக்கும் தேமுதிக வின் மாவட்ட மகளிரணித் துணைச் செயலர் மாது.

17 Jun 2019

தேர்தல் செலவுக்காக பெற்ற ரூ.10 லட்சம் கடனை அடைக்க கரும்புச்சாறு விற்கும் பெண்

தமிழக முதல்வர் பழனிசாமி

17 Jun 2019

3 துணை முதல்வர்கள்: முதல்வரின் புது முடிவு