நகர்ப்புறங்களில் அரசியல் கூட்டங்கள் நடத்துவதற்கு நீதிமன்றம் தடை

தமிழக நகரங்களில் தெரு முனைகள், பொது வழிகள், குடியிருப்பு வட்டாரங்களில் அரசியல் கூட்டங்களையும் பேரணிகளையும் நடத்த மதுரை உயர் நீதிமன்றக் கிளை தடை விதித்துள்ளது.
மாறாக, பொதுத் திடல்கள் அல்லது புறவழிச்சாலையை ஒட்டிய பகுதிகளில் கட்சிக் கூட்டம் நடத்த அனுமதி வழங்கலாம் என நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோவிலை ஒட்டிய பகுதிகளில் பொதுக் கூட்டங்கள் நடப்பது மக்களுக்குப் பெரும் இடையூறாக இருக்கிறது எனக் கூறி, பொது நல வழக்குத் தொடுக்கப்பட்டது. அதையேற்று, நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ள அரசியல் கட்சிகளுக்கு ஏமாற்றமளிப்பதாக அமைந்துள்ளது.