எதிர்க்கட்சி வேட்பாளராகக் களமிறங்கும் சித்தப்பாவால் தமிழிசைக்கு தர்மசங்கடம்

குமரி: தனது கட்சியின் மூத்த தலைவரான பொன் ராதாகிருஷ் ணனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள வேண்டிய நிலையில் உள்ள தமிழக பாஜக தலைவி தமிழிசை, தனது சித்தப்பாவான வசந்தகுமாரை தேர்தல் களத்தில் விமர்சிப்பாரா? எனும் கேள்வி எழுந்துள்ளது.
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகு தியில் பொன். ராதாகிருஷ்ணனை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் வசந்தகுமார் களமிறங்குகிறார். இவர் தமிழிசையின் சித்தப்பா ஆவார்.
இந்நிலையில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் தமி ழிசை, மாநில பாஜக தலைவி என்ற வகையில், குமரியிலும் பிர சாரம் செய்வார் என எதிர்பார்க் கப்படுகிறது. 
இதையடுத்து எதிர்க்கட்சி வேட்பாளரான வசந்தகுமாரை தாக்கிப் பேசி அவர் பிரசாரம் செய் வாரா? எனும் கேள்வி எழுந் துள்ளது.
அரசியல் நாகரிகள் என்று கூறி வசந்தகுமாரை விமர்சிக்கா விட்டால் கட்சித் தலைமையின் அதிருப்தியை தமிழிசை சம்பாதிக்க நேரிடும் எனக் கூறப்படு கிறது. இதனால் அவர் தர்மசங் கடத்தில் உள்ளதாகத் தெரிகிறது.