ராமநாதபுரத்தில் தேர்தல் களைகட்டவில்லை

ராமநாதபுரம்: அதிமுக, திமுக இடையே நேரடிப் போட்டி இல்லாததால் ராமநாதபுரம் தொகுதியில் தேர்தல் பிரசாரம் மந்தகதியில் நடப்பதாகக் கூறப்படுகிறது.
இம்முறை இத்தொகுதி அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கும், திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் களமிறங்கும் நிலையில், கூட்டணிக் கட்சியினர் இன்னும் பிரசாரத்தைத் துவங்கவில்லை. இதே போல் முஸ்லிம் லீக் வேட்பாளராக நவாஸ் கனி அறிவிக்கப்பட்டு சில நாட்கள் ஆகியும் கூட்டணிக் கட்சியினர் மத்தியில் பிரசாரம் களைகட்டவில்லை.
இதற்கிடையே அமமுக சார்பில் போட்டியிடும் ஆனந்த் தனக்குரிய தேர்தல் சின்னம் ஒதுக்கப்பட்ட பிறகு முழுவீச்சில் பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாகக் கூறப்படு கிறது. ஆக மொத்தத்தில், ராமநாதபுரம் தொகுதி தேர்தல் களம் களையிழந்துக் காணப்படுகிறது.