காங்கிரசார் வெளிநடப்பால் பெரும் பரபரப்பு

சிதம்பரம்: வேட்பாளர் அறிமுகக் கூட்டத்திலிருந்து காங்கிரஸ் நிர்வாகிகள் வெளிநடப்பு செய்ததால் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் பரபரப்பு நிலவியது. இங்கு திமுக கூட்டணி சார்பில் விடு தலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். 
பானைச் சின்னத்தில் அவர் போட்டியிடும் நிலையில், நேற்று முன் தினம் வேட்பாளர் அறி முகக் கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அமர உரிய இடம் ஒதுக்கப் படவில்லை என்று புகார் எழுந்தது. இதையடுத்து தங்களுக்குரிய மரியாதை அளிக்கப்படவில்லை எனக் கூறி அவர்கள் கூட்டத்திலி ருந்து வெளியேறினர்.