கமல், ஸ்ரீபிரியா போட்டியிடும் தொகுதிகள் இன்று கோவை பொதுக்கூட்டத்தில் அறிவிப்பு

சென்னை: நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி யிடுகிறார்.
மக்கள் நீதி மய்யம் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் களம் இறங்கும் வேட்பாளர்களின் நேர் காணல்  கட்சியின் தலைமை அலுவலகத்தில் கடந்த வாரம் நடைபெற்றது. கட்சித் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் கட்சி யின் தேர்தல் பணிக்குழுவோடு சமூக செயற்பாட்டாளர்கள், இலக் கியவாதிகள் முன்னிலையில் இந்த நேர்காணல் நடைபெற்றது. 
நேர்காணலுக்குப் பின்னர் 2 நாட்கள் மனு பரிசீலனை நடை பெற்றது. வேட்பாளர் தேர்வில் கல்வித் தகுதி, தொகுதி மக்க ளுக்கு ஆற்றிய பணிகள் ஆகிய வற்றுக்கு முக்கியத்துவம் தரப் பட்டதாக அக்கட்சியினர் தெரி வித்தனர். முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை, கடந்த 20ஆம் தேதி கமல்ஹாசன் (படம்) வெளியிட் டார்.

இன்று மாலை 6 மணிக்குக் கோவை கொடிசியா வளாகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற இருக் கிறது. இந்தப் பொதுக்கூட்டத் துக்கு வேட்பாளர் அறிமுக விழா மற்றும் மாற்றத்துக்கான துவக்க விழா என்று கமல் கட்சி வெளி யிட்டுள்ள அறிக்கையில் குறிப் பிட்டு இருக்கிறார்கள். முதல் பட்டியலில் 21 வேட்பாளர்கள் தான் இடம்பெற்று இருந்தனர். கமீலா நாசர் (மத்திய சென்னை), முன்னாள் காவல் அதிகாரி மௌ ரியா (வடசென்னை) இருவரைத் தவிர வேறு பிரபலங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை. 
குறிப்பாக, கமல்ஹாசன்  தனது சொந்த ஊரான ராமநாத புரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் எனத் தொண்டர் கள் எதிர்பார்க்கின்றனர். 
கட்சியின் தேர்தல் அறிக்கை யில் இடம்பெறப் போகும் அம்சங் கள் என்னவாக இருக்கும் எனத் தெரிந்துகொள்ள எதிர்க் கட்சிகள்  ஆவலுடன் இருப்ப தாகக் கூறப்படுகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கரும்புச்சாறு கடை வைத்திருக்கும் தேமுதிக வின் மாவட்ட மகளிரணித் துணைச் செயலர் மாது.

17 Jun 2019

தேர்தல் செலவுக்காக பெற்ற ரூ.10 லட்சம் கடனை அடைக்க கரும்புச்சாறு விற்கும் பெண்

தமிழக முதல்வர் பழனிசாமி

17 Jun 2019

3 துணை முதல்வர்கள்: முதல்வரின் புது முடிவு