தமிழகத்தில் வான்குடையில் பறந்து வாக்களிப்பு விழிப்புணர்வு 

தென்சென்னை மக்களவைத் தொகுதியில் 100 விழுக்காடு வாக்களிப்பதன் அவசியம் குறித்து முதல்முறையாக வாக் களிக்கவிருக்கும் இளையர்கள் பாலவாக்கம் கடற்கரை பகுதியில் வான்குடையில் பறந்து விழிப் புணர்வு ஏற்படுத்தினர். முன்ன தாக பாலவாக்கம் கடற்கரையில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிக்கும் முறை குறித்தும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்தும் மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கினார்.