சுடச் சுடச் செய்திகள்

நீண்ட இழுபறிக்குப் பின்னர் கார்த்தி சிதம்பரம் வேட்பாளரானார்

புதுடெல்லி:  நீண்ட இழுபறிக்குப் பின்னர் சிவகங்கை நாடாளு மன்றத் தொகுதிக்கான காங்கிரஸ் கட்சி வேட்பாளராக கார்த்தி சிதம் பரம் அறிவிக்கப்பட்டுள்ளார். 
இதைய டுத்து இத்தொகுதியில் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகங்கை தொகுதியில் பாஜக சார்பாக அக்கட்சியின் தேசிய செயலர் எச்.ராஜா போட்டி யிடுகிறார். திமுக கூட்டணியில் இத்தொகுதி காங்கிரசுக்கு ஒதுக் கப்பட்டுள்ளது.
பாஜக வேட்பாளர் அறிவிக் கப்பட்ட நிலையில், காங்கிரஸ் மட்டும் வேட்பாளரின் பெயரை அறிவிக்காமல் இருந்தது. இதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரத்துக்கு தமிழக காங்கி ரசைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததே காரணம் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில், கார்த்தி சிதம் பரத்துக்கு தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் செயலர் கராத்தே தியாகராஜன் ஆதரவு தெரிவித்திருந்தார். அவருக்கு வாய்ப்பளிக்க தமிழக காங்கிரஸ் தலைவர் டெல்லி தலைமைக்கு கூடுதல் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் வலி யுறுத்தி இருந்தார். 
இந்நிலையில் நீண்ட ஆலோச னைக்குப் பிறகு நேற்று மாலை சிவகங்கை வேட்பாளராக கார்த்தி சிதம்பரத்தின் பெயரை அறிவித் தது காங்கிரஸ் தலைமை. வேட் பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து இன்று முதல் தமது பிரசாரப் பணிகளைத் துவங்க உள்ளார் கார்த்தி சிதம்பரம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon