பிரசார நிகழ்வின்போது 50 பேர் மீது மின்சாரம் பாய்ந்ததால் பரபரப்பு

வேலூர்: தேர்தல்  பிரசாரத்தின் போது 50 பேரை மின்சாரம் தாக் கியதால் வேலூரில் கடும் அதிர்ச்சி நிலவியது. 
நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளார். 
நேற்று முன்தினம் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பேருந்து நிலையம் அருகே அவர் பங் கேற்கும் பிரசாரக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
இதற்காக அப்பகுதியில் அதி முக நிர்வாகிகள் பெரிய மேடையை அமைத்திருந்தனர். 
மேலும் மேடைக்கு அருகே இருந்த பச்சை தைல மரக்கம்பு களில் அதிமுக கொடிகளையும் கட்டி இருந்தனர். 
நேற்று முன்தினம் காலை பிரசார நிகழ்வைக் காண பொது மக்கள் ஏராளமானோர்  திரண்ட தால் அங்கு கூட்ட நெரிசல் ஏற் பட்டது. திடீர் தள்ளுமுள்ளு காரணமாகக் கூட்டத்துக்கு வந்த பலர் மேடைக்கருகே இருந்த தைல மரக் கம்புகளைப் பிடித்தனர். 
அச்சமயம் அக்கம்புகளுக்கு மேலே செல்லும் மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசிக் கொண்டதில் பலர் மீது மின்சாரம் பாய்ந்தது. திடீரென மின்சாரம் பாய்ந்ததால் பலர் அலறியபடி கீழே விழுந்தனர். 
இதைக் கண்டு பதறிப்போன  மற்றவர்களும் அதிர்ச்சியில் கூச்ச லிட்டனர். 
இதையடுத்து மின் விநியோகம் உடனடியாகத் துண்டிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் அங்கு பதற்றம் தணிந் ததை அடுத்து மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டு பிரசார நிகழ்வு தொடர்ந்து நடைபெற்றது.
இந்தச் சம்பவத்தின் பின்னணி யில் ஏதேனும் காரணம் உள்ளதா என போலிசார் விசாரிக்கின்றனர்.