தமிழிசையை ஆசீர்வதிக்கக்கூட இயலாது என்கிறார் வசந்தகுமார்

டெல்லி: தமது உறவினர் என்ற போதிலும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநிலத் தலைவி தமிழிசையை ஆதரிக்க இயலாது என கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமது அண்ணன் மகளான தமிழிசைக்குத் தமது ஆசீர்வாதம் கூட கிடைக்க வாய்ப்பில்லை என்று குறிப்பிட்டார். “தேர்தல் களத்தைப் பொறுத்தமட்டில் உறவு, பாசம் என்பதற்கு இடமில்லை. தமிழிசை நிச்சயம் தேர்தலில் தோல்வி காண்பார். தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழிதான் வெற்றி பெறுவார். இதில் சந்தேகமே இல்லை. கனிமொழியின் வெற்றிக்காக நான் கடுமையாக உழைக்கத் தயாராக உள்ளேன்” என்றார் வசந்தகுமார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon