சுடச் சுடச் செய்திகள்

தேனி தொகுதியில் சூடுபிடித்தது தேர்தல் களம்

தேனி: தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு தேர்தல் களம் சூடாகி உள்ளது.  
இம்முறை காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் களம் இறக் கப்பட்டுள்ளார். ஏற்கெனவே அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல் வத்தின் மகன் ரவீந்திரநாத் களம் இறங்கி உள்ளார். அமமுக சார்பில் தங்கத் தமிழ்ச்செல்வன் போட்டி யிடுகிறார். 
மூவருமே தீவிரப் பிரசாரம் மேற்கொள்வர் என எதிர்பார்க்கப் படுவதால் போட்டி கடுமையாக இருக் கும் எனக் கருதப்படுகிறது. இந்நிலையில் சொந்த ஊரி லேயே ஓபிஎஸ் மகனைத் தம்மால் தோற்கடிக்க முடியும் என இளங்கோவன் சவால் விடுத்துள்ளார்.
நேற்று முன்தினம் சென்னையில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், கடந்த 50 ஆண்டு கால அரசியல் வாழ்வில் தாம் எந்தவித ஊழல் குற்றச் சாட்டுக்கும் ஆளானதில்லை என்றார்.
“சுடுகாட்டில் தியானம் செய்தோ, ஜோசியம் பார்த்தோ அரசியல் செய்ப வன் அல்ல நான். மதவாத சக்திகள், ஊழல்வாதி களுக்கு வாக்களிப்பதில்லை என மக்கள் உறுதியாக இருப்பதால் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறு வேன். ஜெயலலிதாவையே எதிர் கொண்டவன் நான். எனவே இன்றைய துணை முதல்வரைக் கண்டு அஞ்சமாட்டேன்,” என்றார் இளங்கோவன்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon