‘திராவிடத்தை சிதைக்கத் துடிக்கிறது பாஜக’

தேனி: மதம் என்ற போர்வையில் பிற மதத்தினரை வாழவிடமாட் டோம் என்ற வெறுப்புணர்வானது பேராபத்தில் முடியும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ எச்சரித் துள்ளார். 
திராவிட இயக்கத்தின் அடித் தளத்தைச் சிதைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மத்தியில் உள்ள பாஜக அரசு செயல்பட்டு வருவதாகக் கோவில்பட்டியில் மேற்கொண்ட தேர்தல் பிரசாரத்தின் போது அவர் குற்றம் சாட்டினார். 
“தமிழகத்தில் தற்போது நடைபெற்று வருவது ஊழல் அரசு. மத்திய அரசை எதிர்க்கத் துணிவு இல்லாத அரசு. எனவே, இரு அரசுகளும் மாறவேண்டும். இந் திய அரசியல் வரலாற்றில் நடப்பு ஆண்டு என்பது மாற்றங்களுக்கான ஆண்டாக இருக்கும்,” என்றார் வைகோ.
பயிர்க் காப்பீட்டுத் திட்டம் என்று பிரதமர் மோடி அறிவித்த திட்டத்தால் பல தனியார் நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் லாபம் பெற்றிருப்ப தாகச் சாடிய அவர், அத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்குப் பணம் ஏதும் கிடைக்கவில்லை என்றார்.