9 நகரங்களில் நூறு டிகிரி வெயில்

சென்னை: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் மெல்ல அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 9 நகரங்களில் வெப்ப நிலையானது 100 டிகிரிக்கு மேல் பதிவானது. அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது.சேலம், திருத்தணியில் 103 டிகிரி, வேலூர், தர்மபுரியில் 102டிகிரி, திருச்சி, மதுரையில் 101 டிகிரி, கோவை, பாளையங்கோட்டையில் 100 டிகிரி என வெப்பம் பதிவாகியுள்ளது.