கட்டுப்பாடற்ற பேச்சால் திமுகவிலிருந்து ராதாரவி நீக்கம்

நடிகர் ராதாரவி திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருப்பதாக அக்கட்சி அறிவித்துள்ளது. இதனை அறிவித்த கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன், ராதாரவி கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாகத் தெரிவித்தார். 

இம்முடிவு அறிவிக்கப்பட்ட ஒரு நாளுக்கு முன்னர் ராதாரவி, நடிகை நயன்தாராவின் படம் ஒன்றின் முன்னோட்ட வெளியீட்டு விழாவின்போது அந்நடிகைக்கு எதிராகப் புண்படும் சொற்களைப் பயன்படுத்தி பேசினார். 

பொள்ளாச்சி பாலியல் சர்ச்சையைப் பற்றியும் 66 வயது ராதாரவி இவ்வாறு கிண்டலடித்தார். இவர் இவ்வாறு கூறியதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் தீயெனப் பரவியது. 

இதனை அடுத்து, நயன்தாராவின் காதலரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் ராதாரவிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தமிழக முதல்வர் பழனிசாமி

17 Jun 2019

3 துணை முதல்வர்கள்: முதல்வரின் புது முடிவு

கரும்புச்சாறு கடை வைத்திருக்கும் தேமுதிக வின் மாவட்ட மகளிரணித் துணைச் செயலர் மாது.

17 Jun 2019

தேர்தல் செலவுக்காக பெற்ற ரூ.10 லட்சம் கடனை அடைக்க கரும்புச்சாறு விற்கும் பெண்