ரொக்கப் பரிசு, வாகனம், வெளிநாட்டுச் சுற்றுலா: கட்சிக்காரர்களைக் கவர கழகங்கள் புதுஉத்தி

எந்த வழியானாலும் சரி, தேர்தலில் வெற்றி பெறுவதையே இலக்காகக் கொண்டுள்ள இந்தியாவின் முக்கிய அரசியல் கட்சிகள், அதற் காக வாக்காளர்களுக்குப் பணத் தையும் பரிசுப்பொருட்களையும் அள்ளி வீசத் தயங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு பல கால மாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில், முந்தைய தேர் தல்களைப் போலல்லாமல், இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலிலும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலிலும் வெல்ல தமிழ கத்தின் இரு பெரும் கட்சிகளான திமுகவும் அதிமுகவும் புதுவழி யைக் கையாண்டு வருகின்றன.
இம்முறை வாக்காளர்களை மட்டுமல்லாது, துடிப்புடன் தேர்தல் பணியாற்றி அதிக வாக்குகளைப் பெற்றுத் தரும் தொகுதிப் பொறுப் பாளர்களுக்கும் பணம், பரிசு, சுற்றுலா எனப் பல்வேறு வாக்குறுதி களை அக்கட்சிகள் அளித்து வருவதாகக் கூறப்படுகிறது.
தமிழக கல்வி அமைச்சரும் அதிமுகவின் முக்கிய தலைவர் களில் ஒருவருமான செங்கோட் டையன், அதிக வாக்குகளைப் பெற்றுத் தரும் தொகுதி பொறுப் பாளர்களுக்கு ஐந்து பவுன் தங்கம் வழங்கப்படும் என அறிவித்து இருக்கிறார்.
அரக்கோணம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சரான திமுகவின் ஜெகத் ரட்சகன், நாடாளுமன்றத் தேர் தலில் தம்மை வெல்ல வைக்கும் கட்சியினருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு தருவதாக உறுதியளித்து உள்ளார்.