தேர்தலைப் புறக்கணிக்க 152 தமிழக கிராமங்கள் முடிவு

தேர்தலைப் புறக்கணிக்க 152 தமிழக கிராமங்கள் முடிவு

1 mins read

தமிழகத்தின் தேனி நாடாளு மன்றத் தொகுதி மற்றும் ஆண்டிப் பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 152 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தேர்தலைப் புறக் கணிக்கப்போவதாக அறிவித்து இருப்பது அந்தத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் புளியைக் கரைத்துள்ளது. அவர்கள் இந்த அதிரடி முடிவை எடுக்க அங்கு தலை விரித்தாடும் தண்ணீர்ப் பஞ்சமே காரணம். முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் காலத்திலேயே அப்பகுதியில் திப்பரவு அணைத்திட்டம் செயல் படுத்தப்படும் என உறுதியளிக்கப் பட்டது. வைகை அணையில் இருந்து கால்வாய் மூலம் ஆண்டிப் பட்டியில் இருக்கும் 40 கண் மாய்களுக்குத் தண்ணீரைக் கொண்டு செல்வதே அத்திட்டம். இதன்மூலம் பல்லாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பலனடையும்; குடிநீர்ப் பிரச்சினையும் தீரும். ஆயினும், இதுநாள் வரைக்கும் அதை யாரும் கண்டுகொள்ளாத தால் அத்திட்டம் கிடப்பில் போடப் பட்டது. இதையடுத்து, ஆண்டிப்பட் டியை ஒட்டிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் சேர்ந்து 'தமிழ் விவசாயச் சங்கம்' என்ற அமைப்பை ஏற்படுத்தினர். திப்புரவு அணைத் திட்டத்திற்குப் பதிலாக முல்லைப் பெரியாற்றில் இருந்து குழாய் மூலம் ஆண்டிப் பட்டிக்குத் தண்ணீரைக் கொண்டு வரும் திட்ட வரைவை பொறியா ளர்களின் துணையுடன் அந்த விவசாயிகள் தயார்செய்தனர். அந்தத் திட்டவரைவை அனுப்பி, அதைச் செயல்படுத்தும்படி மாநில அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனாலும், அரசிடம் இருந்து எந்தப் பதிலும் வராததால் அவர்கள் கொதிப்படைந்தனர். இந்நிலையில், கடந்த 21ஆம் தேதி தமிழ் விவசாயிகள் சங்கத் தின் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது.