மலைகள், சாலைகளில் அரசியல் விளம்பரங்களை வைப்பதற்கு தடை

மலைகள், சாலைகளில் அரசியல் விளம்பரங்களை வைப்பதற்கு தடை

1 mins read

புதுடெல்லி: தமிழகத்தில் மலைகள், காடுகள், சாலைகளில் பேனர்களும் விளம்பரங்களும் வைப்பதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வகையில் தேர்தல் விளம்பரங் களைச் செய்வதற்கு தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. யானை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில், "நெடுஞ் சாலைகளில் இத்தகைய பேனர்களை வைப்பதன் மூலம் நிறையவே விபத்துகள் ஏற்படுகின்றன. மலைகள், காடுகளில் இத்தகைய விளம்பரங்களை வைப்பதால் விலங்குகளுடன் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. மேலும் பல பிரச்சினைகளும் ஏற்படுகின்றன," என்று கூறியிருந்தார்.