கோவை: விரைவில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் கார ணமாக 17 ஆண்டுகாலமாக மின்சார வசதியின்றி அவதிப்பட்டு வந்த பள்ளிக்கும் அங்கு படிக்கும் மாணவர்களுக்கும் ஒளி கிடைத் துள்ளது. கோவை மாவட்டம், தூமனூர் பஞ்சாயத்து நடுநிலைப்பள்ளியில் ஒன்று முதல் 8ஆம் வகுப்புவரை 48 மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளி கடந்த 2002ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு தூமனூர், செம்புக்கரை, காட்டு சாலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் போதிய மின்சாரம், குடிநீர் வசதி அங்கில்லை. இந்நிலையில் வரும் மக்கள வைத் தேர்தலுக்காக இப்பள்ளி வாக்குச்சாவடியாக மாற்றப்படு கிறது. இதையொட்டி தேர்தல் தொடர்பான பல்வேறு உபகரணங் களும் வந்து கொண்டிருக்கின் றன. இதற்காகப் பள்ளிக்கு மின் சார வசதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேர்தலால் 17 ஆண்டுக்குப்பின் ஒளி சிந்தும் பள்ளிக்கூடம்
1 mins read

