நயன்தாரா அறிக்கை

நயன்தாரா அறிக்கை

1 mins read
22de7e27-66ff-441a-9473-afcd2a94ac3f
-

ராதா ரவி விவகாரம் தொடர்பில் நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். "ராதாரவியைக் கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்த திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு எனது நன்றியும் பாராட்டுகளும். "தானும் ஒரு பெண்ணின் வயிற்றில்தான் பிறந்தார் என்பதை ராதாரவி உள்ளிட்டவர்கள் மறக்க வேண்டாம். சினிமா துறையில் மூத்த நடிகராக இருக்கும் இவர் மற்ற இளம் தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக, வழிகாட்டுப வராகத் திகழவேண்டும். திரைப் படத்தில் வாய்ப்பு கிடைக்காமல் போனதால் என்னைப் பற்றி கருத்து தெரிவித்து பிரபலமடைய நினைக்கும் ராதா ரவியை விசா ரிக்க குழு அமைக்கவேண்டும். "அவருடைய கீழ்த்தரமான பேச்சை அங்கிருந்தவர்கள் கைத் தட்டி ரசித்து, சிரித்தது வேதனை யான விஷயம். ராதாரவி போன்ற வர்களை மக்களும் ரசிகர்களும் ஆதரிக்கக்கூடாது என்பதே என் கோரிக்கை," என்று கூறியுள்ளார்.