ராஜகண்ணப்பன் ஆதரவு தருபவருக்கே சிவகங்கை வெற்றி

ராஜகண்ணப்பன் ஆதரவு தருபவருக்கே சிவகங்கை வெற்றி

2 mins read
3654afb7-5995-40de-9554-e90ff1a12b7f
-

சிவகங்கை: தமிழகத்தில் மக்கள வைத் தேர்தல் களத்தில் தேனி தொகுதிக்கு அடுத்து சிவகங்கை தொகுதியும் முக்கிய இடம்பிடித் துள்ளது. இத்தொகுதியில் காங் கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரமும் பாஜக சார்பில் எச்.ராஜாவும் நேருக்கு நேர் மோதவுள்ளனர். கார்த்தியை எதிர்த்துப் போட்டி யிடும் எச்.ராஜா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ள நிலை யில், அதை வைத்து கூட்டத்தில் பேசி வாக்குகளைப் பறிக்கும் யுக்திகளைக் கையாளலாம் என் பது காங்கிரசின் திட்டம். அதேசமயம் கார்த்தி சிதம் பரம் மீது உள்ள ஊழல் புகார்களை முன்னிறுத்தி கூட்டத்தில் பேசு வதற்கு திட்டமிட்டுள்ளது பாஜக. அவர்களின் இந்த உத்தி ஒருபுறம் இருக்க, சிவகங்கை தொகுதியில் மற்றொரு முக்கிய அரசியல் ஆளுமையாக காணப் படுகிறார் ராஜகண்ணப்பன். அதிமுகவைச் சேர்ந்த இவர் சிவகங்கையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்துவார் என்று தெரிகிறது. அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜகவுக்குச் சிவ கங்கை தொகுதி ஒதுக்கப்பட்டது. இதற்கு கடும் அதிருப்தி தெரி வித்த ராஜகண்ணப்பன், திமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தார். இது அதிமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தினாலும் அவர் தொடர்ந்து திமுகவுக்கு ஆதரவு அளித்து வருகிறார். 2009 மக்களவைத் தேர்தலில், சிவகங்கையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை எதிர்த்து அதிமுக சார்பில் ராஜ கண்ணப்பன் போட்டியிட்டார். இதில் சிதம்பரம் 3,354 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெற் றார். அம்முடிவில் குளறுபடி ஏற் பட்டிருப்பதாக கூறி ப.சிதம்பரத் தின் வெற்றியை எதிர்த்து ராஜ கண்ணப்பன் வழக்குத் தொடர்ந் தார். இவ்வழக்கு உயர் நீதிமன்றத் தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், ராஜகண்ணப் பன் சிவகங்கை தொகுதியில் காங்கிரசுக்கு ஆதரவாகப் பிர சாரம் செய்ய உள்ளார். இதற்காக கார்த்தி சிதம்பரமும் அவரைச் சந்தித்து ஆதரவு பெற் றார். இந்த நிலைப்பாடு அரசியல் களத்தில் பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. காங்கிரசுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தாலும் ப.சிதம்பரம் மீதான வழக்குத் தொடரும் என் றும் கண்ணப்பன் கூறியுள்ளார். ராஜகண்ணப்பனின் இந்த நிலைப்பாடு ஆடு பகை, குட்டி உறவா என்கிற கேள்வியை எழுப் பினாலும் சிவகங்கை தொகுதி யில் இவருடைய நிலைப்பாடு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். 2019-03-26 06:00:00 +0800