திமுகவில் இருந்து ராதாரவி நீக்கம்

திமுகவில் இருந்து ராதாரவி நீக்கம்

2 mins read

சென்னை: நடிகை நயன்தாரா குறித்து நடிகர் ராதாரவி பேசியுள்ள கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அவரை திமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டுள்ளது திமுக. இந்நிலையில், "நான் கூறிய கருத்து உங்கள் மனதை முள்ளாகத் தைத்து புண்படுத்தி இருந்தால் அதற் காக வருத்தம் தெரிவித்துக்கொள் கிறேன்," என்று நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு ராதா ரவி விளக்கம் அளித்துள்ளார். ராதா ரவியின் அவதூறு கருத்து அவரை அறிவு குன்றியவராக காட்டு வதாகக் கூறியுள்ள விக்னேஷ் சிவன், ராதா ரவி மீது நடவடிக்கை எடுக்கும்படி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், கனிமொழி இருவருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். "திமுகவிலிருந்து ராதாரவி தற் காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். "கட்சியின் கட்டுப்பாட்டை மீறிய தாலும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் அவர் செயல்பட்டு வருவ தாலும் திமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்," என்று அக்கட்சியின் பொதுச்செய லாளர் க.அன்பழகன் கூறியுள்ளார். இந்நிலையில், நயன்தாரா விவ காரம் தொடர்பில் ராதாரவி அளித் துள்ள சிறப்பு பேட்டியில், "திமுகவில் இருந்து நான் நீக்கப்பட்டதற்கான காரணம் எனக்குத் தெரியாது. வாகை சந்திரசேகர் சொன்னபிறகுதான் எனக்கே தெரியவந்தது. "தேவைப்பட்டால் இவ்விவகாரம் குறித்து திமுக தலைமையிடம் நான் விளக்கம் அளிக்கத் தயார். மீண்டும் திமுகவில் இணைவதற்கு வாய்ப்பிருந் தால் இணையவும் தயார். "நயன்தாராவைப் பற்றி நான் தவ றாகப் பேசவில்லை. என் பேச்சு அரசி யலாக்கப்பட்டுள்ளது. "இருப்பினும் அவர்களுக்கு என் னுடைய மனவருத்தத்தைத் தெரி வித்துக்கொள்கிறேன்," என்று ராதா ரவி தெரிவித்துள்ளார். இந்நிலையில், ராதாரவியின் கருத்து ஏற்க இயலாதது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண் டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பதிவில், "பெண்ணுரிமையை முன்னிறுத்தும் திமுகவில் அங்கம் வகிக்கும் நடிகர் ராதா ரவி, திரைத்துறையைச் சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்து கூறிய கருத்து ஏற்க இயலாதது. இது கடும் கண்டனத்திற்குரியது. "கழகத்தினர் யாவரும் கண்ணி யம் குறையாத வகையில் கருத்து களைத் தெரிவிக்கவேண்டும். மீறு வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்," என்று தெரிவித்துள்ளார்.