டிடிவி தினகரனின் (படம்) அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு 'குக்கர்' சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதையடுத்து, அந்தக் கட்சிக்கு வேறு ஒரு பொது வான சின்னத்தை ஒதுக் குவது குறித்துப் பரிசீலிக் கும்படி தேர்தல் ஆணையத் திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதிமுக அணியில் இருந்து பிரிந்து அமமுக கட்சியைத் தனியாகத் தொடங் கிய தினகரன், இரட்டை இலைச் சின்னத்தைத் தன்வசப்படுத்த முயன் றார். ஆனால், இரட்டை இலைச் சின்னம் அதிமுகவுக்கே உரியது என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்க, உச்ச நீதிமன்றமும் அதை உறுதி செய்தது. இந்த நிலையில், ஆர்கே நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் 'குக்கர்' சின்னத்தில் போட்டியிட்டு வென்ற தினகரன், அந்தச் சின்னத்தையேனும் தங்களது கட்சிக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால், அமமுக பதிவு செய்யப் படாத கட்சி என்பதால் அக்கட்சிக்குப் பொதுவான சின்னத்தை ஒதுக்க முடியாது என்றும் அக்கட்சியினர் தேர்தலில் போட்டியிட்டால் அவர்களை சுயேச்சை வேட்பாளராகத் தான் கருத முடியும் எனத் தேர்தல் ஆணையம் நீதி மன்றத்தில் தெரிவித்தது. அத்துடன், அக்கட்சி வேட்பாளர்களுக்குத் தனித் தனி சின்னங்களையே ஒதுக்க முடியும் என்றும் ஆணையம் கூறியது. அதைக் கேட்ட தினகரன் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், "இன்றே (நேற்றே) கட்சியைப் பதிவு செய்துவிடுகிறோம். பொதுவான சின்னத்தை ஒதுக்க உத்தரவிடுங்கள்," எனக் கேட்டுக்கொண்டார். அப்படியும் பொதுச் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இந்நிலையில், தமிழகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய நேற்றே கடைசி நாள் என்பதால், அமமுக வேட்பாளர் களின் அரசியல் வாழ்வைக் கருத்தில் கொண்டு அவர்கள் அனைவருக்கும் பொதுவான சின்னத்தை ஒதுக்குவது குறித்து பரிசீலனை செய்யும்படி தேர்தல் ஆணையத்தை நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து, நேற்று காலக்கெடு முடிவதற்குள் விரைந்து வேட்புமனுத் தாக்கல் செய்யும்படி டிடிவி தினகரன், அமமுக வேட்பாளர்களுக்குத் தகவல் அனுப்பியதாகச் சொல்லப்பட்டது.
தினகரன் கட்சிக்கு 'குக்கர்' சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு
2 mins read
-

