வாக்காளர்களின் மனங்கவர்ந்து, வாக்குகளை அள்ள எத்தகைய வழிகளைக் கையாளலாம் எனக் கட்சிகள் யோசித்து வரும் வேளையில், வேட்புமனுத் தாக்கலின்போது அதிகாரிகளையே 'எண்ண' வைத்துவிட்டார் தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும் குப்பல்ஜி தேவதாஸ். வேட்புமனுத் தாக்கல் செய்ய மூன்று பாத்திரங்களுடன் இவர் வந்ததைக் கண்டதும் அதிகாரிகள் முதலில் குழம்பிப் போயினர். தேர்தலில் போட்டியிட ரூ.25,000 வைப்புத்தொகை செலுத்த வேண்டிய நிலையில், அத்தொகை முழுவதையும் ஒன்று, இரண்டு, ஐந்து, பத்து ரூபாய் நாணயங்களாகப் பாத்திரங்களில் போட்டு இவர் கொண்டு வந்திருந்தார். அந்த நாணயங்களை எண்ணி முடிக்க இரண்டு மணி நேரமானது என்றும் 12 அதிகாரிகள் அந்தப் பணியில் ஈடுபட்டனர் என்றும் கூறப்பட்டது. படம்: ஏஎன்ஐ
'எண்ண' வைத்த சுயேச்சை வேட்பாளர்
1 mins read
-

