நச்சுவாயு தாக்கி 6 பேர் பலி

நச்சுவாயு தாக்கி 6 பேர் பலி

2 mins read
Google News Preferred Icon

திருப்பெரும்புதூர்: கழிவுநீர்த் தொட் டியைச் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றபோது அதில் இறங்கிய தந்தை, மகன்கள் உட்பட ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சோக சம்பவம் ஸ்ரீபெரும் புதூர் அருகே நேற்று நிகழ்ந்தது. இதனால் அப்பகுதியில் சோகம் நிலவுகிறது. ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. 45 வயதான இவருக்கு இரு மகன்கள் இருந்தனர். தனது குடும்பத்துடன் செல்வ பெருமாள் நகரில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை தமது வீட்டின் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தப்படுத்த முடிவு செய்தார் கிருஷ்ணமூர்த்தி. இதற்காக வாடகை லாரி ஒன்றை வரவழைத்தார். சுத்தப்படுத்தும் பணியில் சில தொழிலாளர்கள் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் நடைபெற்ற சுத்தப்படுத்தும் பணி முடிந்த பின்னர், தொழிலாளர்கள் நிறைய கழிவுகளை எடுத்துக் கொண்டு லாரியில் புறப்பட்டுச் சென்றனர். இதையடுத்து எவ்வளவு கழிவு அப்புறப்படுத்தப் பட்டுள்ளது என்பதைப் பார்க்க கழிவுநீர்த் தொட்டிக்குள் சற்றே இறங்கிப் பார்த்துள்ளார் கிருஷ்ணமூர்த்தி. அப்போது தொட்டிக்குள் திடீரென கசிந்த விஷவாயு அவரைத் தாக்கியது. இதில் நிலைகுலைந்த அவர், மயக்கமடைந்து கழிவுநீர் தொட் டிக்குள் விழுந்தார். இதைக் கண்டு பதறிப்போன அவரது இரு மகன்களும் பதற்றத்தில் அலறினர். தந்தையைக் காப்பாற்ற முயன்ற அவர்களையும் விஷவாயு தாக்கியது. கிருஷ்ணமூர்த்திக்கு அருகிலேயே இருவரும் மயங்கி விழுந்தனர். இதற்கிடையே சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த அண்டை வீட்டார் அங்கு ஓடிவந்தனர். அவர்களில் மூன்று ஆடவர்கள் என்ன நடந் தது எனத் தெரியாமல் கழிவுநீர்த் தொட்டிக்குள் இறங்கி கிருஷ்ண மூர்த்தியையும், அவரது 2 மகன்க ளையும் மீட்க முயன்றபோது அவர்களும் வி‌ஷவாயு தாக்கி பலியாக நேர்ந்தது. இச்சம்பவம் திருப்பெரும்புதூர் பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.