தேனி: அமமுக முக்கிய தலைவர்களில் ஒருவரான தங்கத்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட சிலர் மீது தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டதாக ஆண்டிப்பட்டி போலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக ஆண்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி பறக்கும்படை அதிகாரி அளித்த புகாரில், அமமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியினர் அனுமதியின்றி அதிக வாகனங்களில் ஒன்று கூடி போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். அதன் பேரில் அமமுக நிர்வாகிகள் மீது போலிசார் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் போடியில் அதிக வாகனங்கள் தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து வேட்பாளர் தங்கத் தமிழ்ச்செல்வன் மீது போலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அமமுகவின் தங்கத்தமிழ்ச்செல்வன் மீது தேர்தல் விதிமீறல் வழக்குப்பதிவு
1 mins read

