விமானத்தில் பாம்பு, தவளை கடத்தி வந்தவர் கைது

1 mins read

சென்னை: தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் இருந்து கொடிய விஷம் கொண்ட பாம்பை கடத்தி வந்தவர் கைதானார். 'ஹார்ன் பிட் வைப்பர்' என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் இந்தப் பாம்பு வட ஆப்ரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. நேற்று முன்தினம் விமான நிலையத்தில் இந்தப் பாம்பு கைப்பற்றப்பட்டது. இதன் விஷத்தை முறிக்கக் கூடிய மருந்து இந்தியாவில் கிடையாது. எனவே தீண்டினால் மரணம் நிச்சயம். இதனை விமானம் மூலம் கடத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டார். அவர், அழிந்து வரும் எகிப்திய ஆமைக் குஞ்சுகள், ஹைலா தவளைகள் உள்ளிட்டவற்றையும் கடத்தி வந்ததாகத் தெரிகிறது.