சென்னை: சிவகங்கை, திருவள் ளூர் தொகுதிகளுக்கான வேட்பா ளர்களுக்கு தமிழக காங்கிரசில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இதையடுத்து அதிருப்தியாளர் களை எப்படியேனும் சமாதானப் படுத்தி தேர்தல் பிரசாரப் பணி களில் ஈடுபட வைக்குமாறு மாநில தலைமைக்கு அக்கட்சியின் தேசியத் தலைமை அறிவுறுத்தி உள்ளது. விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் சிவ கங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் களமிறங்குகி றார். அதேபோல் திருவள்ளூர் தொகுதியில் ஜெயகுமார் போட்டியிடுகிறார். ஆனால் இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டதற்கு தமி ழக காங்கிரசில் எதிர்ப்பு கிளம்பி யுள்ளது. கார்த்தி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. எனவே அவருக்கு தொகுதியை ஒதுக்கக்கூடாது என முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தொடக்கம் முதலே வலியுறுத்தி வந்தார். இதையடுத்து தன் மகனுக்காக காங்கிரஸ் மேலிடத் தலைவர் களிடம் ப.சிதம்பரம் தொடர்ந்து பேசி வந்தார். இதன் பலனாக நீண்ட இழுபறிக்குப் பிறகு வேட் பாளராக அறிவிக்கப்பட்டார் கார்த்தி. இதனால் கடும் அதிருப்தி யடைந்த சுதர்சன நாச்சியப்பன், ப.சிதம்பரம் குடும்பத்தை மக்கள் வெறுப்பதாகக் கூறினார். சிதம் பரம் குடும்பத்தார் பல நாடுகளில் சொத்துக்களைச் சேர்த்திருப்ப தாகவும் அவர் குற்றம்சாட்டினார். அவரது இப்பேட்டி காங்கிரஸ் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்ப டுத்தி உள்ளது. இதையடுத்து சுதர்சன நாச்சியப்பன் கட்சிக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்திருப்பது துர திர்ஷ்டவசமானது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார். இந்நிலையில், திருவள்ளூர் தொகுதியின் வேட்பாளராக ஜெய குமார் அறிவிக்கப்பட்டதற்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழக காங்கிரஸ் எஸ்.டி. பிரிவுத் தலை வர் செல்வப்பெருந்தகையும் இத் தொகுதிக்காக விருப்ப மனு அளித்திருந்தார்.
கார்த்திக்கு எதிர்ப்பு: சமாதானம் செய்யும் தமிழக காங்கிரஸ்
2 mins read

