தமிழகத்தின் மன்னார்குடி மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டதில் ஆறு பேர் உயிரிழந்தனர்.
சம்பவம் இந்திய நேரப்படி காலை 9 மணியளவில் நிகழ்ந்ததாக தமிழக ஊடகங்கள் கூறுகின்றன. வெடிச்சத்தத்தால் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு ஆலையைச் சுற்றியிருந்த குடியிருப்புப் பகுதிகளில் அதிர்வு ஏற்பட்டது.
விபத்தில் ஆலைக்கட்டம் பலமாக சேதமடைந்தது. சம்பவம் குறித்த விசாரணை தொடர்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

