ஆலந்தூர்: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குக் கடந்த 23ஆம் தேதி மர்ம கடிதம் ஒன்று வந்தது. அந்தக் கடிதம் சரவணபிரசாத் என்ற பெயரில் எழுதப்பட்டு இருந்தது. கடிதத்தைப் பிரித்துப் பார்த்த ஆளுநர் மாளிகைஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதில், ஆளுநர், தமிழக அமைச்சர்கள் பற்றி தரக்குறைவான வார்த்தை களில் எழுதப்பட்டு இருந்தது. அவர்கள் கொல்லப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந் தது. மேலும் ஆளுநர் மாளிகை மற்றும் அரசு அலுவலகங்களைக் குண்டு வைத்துத் தகர்ப்போம் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுபற்றி ஆளுநர் மாளிகை அதிகாரிகள் சென்னை மாநகர காவல்துறை ஆணையாளரிடம் புகார் தெரிவித்தனர்.
காவல்துறை ஆணையாளர் உத்தரவின்பேரில், கிண்டி காவல்துறை இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து கடிதம் எழுதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்றும் விசா ரணை நடத்தி வருகிறார். மேலும் கடிதம் எங்கிருந்து வந்துள்ளது? என்று அதில் இருந்த முத் திரையை வைத்து விசாரித்து வரு கிறார். கடிதம் எழுதிய ஆடவரைப் பிடிக்க அடையாறு காவல்துறை துணை ஆணையாளர் சேஷாங்சாய் தலைமையில் தனிப்படை அமைக் கப்பட்டு உள்ளது. ஆளுங்கட்சி யான அதிமுக.வை பிடிக்காதவர் தான் இந்தக் கடிதத்தை அனுப்பி இருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் மிரட்டல் ஆசாமி பிடிபட்டால் தான் கடிதத்தின் முழுப் பின்னணி தெரியவரும் என்று காவல்துறையி னர் தெரிவித்தனர்.
மிரட்டல் காரணமாக கிண்டி ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. அங்கு கூடுதல் காவல்துறையினர் பாது காப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள் ளனர். கிண்டி மற்றும் கோட்டூர்புரம் காவல்துறையினர் ஆளுநர் மாளி கையைச் சுற்றியுள்ள பகுதியில் சுற்றுக்காவல் பணியையும் தீவிரப் படுத்தி உள்ளனர். தேர்தல் நேரத் தில் அமைச்சர்களுக்குக் கொலை மிரட்டலும், கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டலும் விடுக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

