39 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட 1,237 பேர் மனு

39 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட 1,237 பேர் மனு

2 mins read

சென்னை: தற்போதைய நாடாளு மன்றத்தின் பதவிக்காலம் ஜூன் மாதம் 3ஆம் தேதி முடிவடைகிறது. புதிதாக 17வது நாடாளுமன்றத் தைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி முதல் மே மாதம் 19ஆம் தேதி வரை 7 கட் டங்களாக நடைபெற இருக்கிறது. இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு 2வது கட்டமாக ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதே நாளில் தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19ஆம் தேதி தொடங்கியது. அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட் பாளர்கள் ஆர்வத்துடன் வந்து வேட்புமனுக்களைத் தாக்கல் செய் தனர். நேற்று முன்தினம் வரை தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 723 பேர் மனுத்தாக்கல் செய்திருந் தனர். இதில், 628 பேர் ஆண்கள், 93 பேர் பெண்கள், 2 திருநங்கைகள் அடங்குவார்கள். இதேபோல், 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு 257 பேர் மனுத்தாக்கல் செய்திருந் தனர். இதில், ஆண்கள் 212 பேரும், பெண்கள் 45 பேரும் அடங்குவர். திருநங்கைகள் யாரும் மனுத்தாக்கல் செய்ய வில்லை. இந்த நிலையில், இறுதி நாளான நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய அதிகம் பேர் ஆர்வம் காட்டினார்கள். மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தயா நிதி மாறன் வேட்புமனு தாக்கல் செய்தார். டி.டி.வி.தினகரன் தலைமையி லான அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள் அனைவரும் நேற்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்தனர். பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் மொத்தம் 1,237 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் ஆண்கள் 1,099 பேரும், பெண்கள் 136 பேரும், திருநங்கைகள் இருவரும் அடங்குவார்கள். அதிகபட்சமாக தூத்துக்குடி தொகுதிக்கு 62 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். குறைந்த பட்சமாக தென்காசி தொகுதிக்கு 11 பேர் மட்டுமே மனுத்தாக்கல் செய்துள்ளனர்.2019-03-