கோயம்புத்தூர்: மக்களவைத் தேர் தலில் கோயம்புத்தூரை எப்படியும் தங்கள் வசம் கொண்டு வந்து விடலாம் என பாரதிய ஜனதா கட்சி நம்பிக்கையுடன் உள்ளது. அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததும், தங்களுக்கு ஒதுக் கிய ஐந்து தொகுதிகளில் கோயம் புத்தூர் கண்டிப்பாக இருக்கவேண் டும் எனக் கேட்டு வாங்கியது பாஜக. இத்தொகுதியில், 1998 மற்றும் 1999ஆம் ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்றத்தேர்தலில் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார். எனவே இம்முறையும் அவரையே அங்கு களமிறக்கி யுள்ளது பாஜக. ஆனால் கடந்த ஐந்து ஆண்டு களாக கோயம்புத்தூர் தொகுதி அதிமுகவின் கோட்டையாக உள் ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில், கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள ஆறு சட்டமன் றத் தொகுதிகளில் ஐந்தில், அதிமுக வென்றுள்ளது. அந்தத் தொகுதிகளில் அதிமுகவுக்குக் கிடைக்கும் வாக்குகள் அப்படியே சி.பி.ராதாகிருஷ்ணனுக்குக் கிடைத்து, அத்துடன் பாஜக வாக்குகளும் சேர்ந்தால் அது சி.பி.ராதாகிருஷ்ணனுக்குச் சாதக மாக இருக்கும். கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் மூவாயிரம் முக்கிய மானவர்களைத் தேர்வுசெய்து அவர்கள் மூலமாக வாக்குகளைப் பெறும் முயற்சியில் பாஜக இறங்கி யுள்ளதாகக் கூறப் படுகிறது. "சி.பி.ராதாகிருஷ்ணன் கயிறு வாரியத்தலைவராக இருந்தபோதும் சரி, இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும் சரி, கோயம்புத்தூர் பக்கம் இவர் எட்டிப்பார்க்கவில்லை. தேர்தல் சமயத்தில் மட்டும்தான் வருகிறார். பெரிதாகக் கோயம்புத்தூருக்கு இவர் எதுவும் செய்யவில்லை," என்று பரவலாக இவர்மேல் குற்றச் சாட்டு வைக்கப்படுகிறது. அப்பகுதிக்கான குடிநீர் விநி யோகத்தைப் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் நிறுவனத்துக்குத் தாரை வார்த்தது, ஜிஎஸ்டியால் கோயம்புத்தூரில் சிறு, குறு தொழில்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு கள், பண மதிப்பிழப்பால் ஏற்பட்ட தொழில் சரிவுகள் போன்றவற்றை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்து வருவதும், பாஜகவுக்குக் கடும் சரிவை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. சி.பி.ராதா கிருஷ்ணனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டதை அக்கட்சி யின் வானதி சீனிவாசன், தலை மையின் முடிவு எதுவாக இருப்பி னும் ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார். இருப்பினும் அவரது ஆதரவா ளர்களும் அத் தொகுதி பாஜக நிர்வாகிகளும் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. அத்துடன் கோயம்புத்தூரை தனது கோட்டை என்று கூறி வந்த அதிமுக, அந்தத் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கியதில், அதிமுக நிர்வாகிகளும் அதிருப்தி யைக் காட்டும் வகையில் வேண்டா வெறுப்புடன் செயல்பட்டு வருவ தாகக் கூறப்படுகிறது.
கோயம்புத்தூர்: அதிருப்தியில் பாஜக, அதிமுக ஆதரவாளர்கள்
2 mins read

