அதிமுக வேட்பாளரின் 'மஞ்சள் சட்டை' நம்பிக்கை

அதிமுக வேட்பாளரின் 'மஞ்சள் சட்டை' நம்பிக்கை

1 mins read
55c62053-13c8-4c51-84fe-6119209ddcc3
-
Google News Preferred Icon

சாத்தூர்: தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் மஞ்சள் சட்டை 'சென்டி மென்ட்டை' கடைப்பிடித்து வருகிறார் சாத்தூர் சட்டப் பேரவை இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜவர்மன். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக எப்போதும் மஞ்சள் சட்டை போட்டு வருகிறார் ராஜவர்மன். சாத்தூர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியி டும் அதிமுக வேட்பாளர் ராஜவர்மன், துரைப்பாண்டி என்ற தனது பெயரை மாற்றிக்கொண்டால் கட்சியில் பெரிய பொறுப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கடந்த இரண் டரை ஆண்டுகளுக்கு முன் தனது பெயரை ராஜவர்மன் என மாற்றிக் கொண்டார். முள்ளிக்குளம் கிளைச் செயலர், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் அறங்காவலர் குழு உறுப்பி னர், விருதுநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச்செயலர், விருதுநகர் மாவட்ட அதிமுக பொரு ளாளர் என பல்வேறு பதவிகளை வகித்து வந்த வேட்பாளர் ராஜவர்மன். தற்போது விருதுநகர் மாவட்ட எம்ஜி ஆர் இளைஞர் அணிச் செயலராகவும் பொறுப்பு வகிக்கிறார். மேலும் தனது பெயருக்கு மணி மகுடம் சூட்டும் வகையில் தற்போது சாத்தூர் இடைத்தேர்தலிலும் அதி முக சார்பில் வேட்பாளராக களம் இறங்கியுள்ளார்.