கிரிக்கெட் மட்டைகள், ஸ்டம்ப்புகளைக் கொண்டு 12 வயது மாணவர் ஒருவரை மேல் வகுப்பு மாணவர்களே அடித்துக்கொன்ற சம்பவம் இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத் தலைநகர் டேராடூனில் நிகழ்ந்துள்ளது. வாசு யாதவ் என்ற அந்த மாணவர் இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதிசெய்ததை அடுத்து, அவரின் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்காமல் பள்ளி நிர்வாகமே அவரது உடலைப் பள்ளி வளாகத்திலேயே (premises) புதைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த உண்டு உறைவிடப் பள்ளியில் (boarding school) கிட்டத்தட்ட 400 மாணவர்கள் படித்து வருகின்றனர். அப்பள்ளியில் பயிலும் 12ஆம் மாணவர்கள் சிலர், தாங்கள் வெளியே சென்றிருந்த சமயத்தில் தங்களுக்குத் தெரியாமல் வாசு பிஸ்கட் பாக்கெட்டைத் திருடிவிட்டதாகக் குற்றம் சாட்டினர். அதோடு நில்லாது, வகுப்பறையிலேயே அவரை அடித்து உதைத்தனர். மயங்கி விழுந்த வாசுவை அவர்கள் அங்கேயே விட்டுச் சென்றனர். வாசு விழுந்து கிடந்ததை மாலையில் விடுதிக் காப்பாளர் கண்ட பிறகுதான் அவர் தாக்கப்பட்ட விவரம் தெரியவந்தது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தால் வாசுவைக் காப்பாற்றி இருக்கலாம் எனக் கூறப்பட்டது.
12 வயது மாணவன் அடித்துக் கொலை; உடலைப் புதைத்து, மூடி மறைத்த பள்ளி நிர்வாகம்
1 mins read
கிரிக்கெட் மட்டைகள், ஸ்டம்ப்புகளைக் கொண்டு 12 வயது மாணவர் அடித்துக் கொலை. படம்: இணையம் -

