நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத் தேர்தலுக்கு இன்னும் இருபது நாட்களே இருக்கும் நிலையில், கட்சி நிர்வாகிகள் எவரும் டிடிவி தினகரனின் அமமுகவிற்குத் தாவிவிடுவார்களோ என்ற அச்சம் தமிழகத்தை ஆளும் அதி முகவிற்கு இல்லாமல் இல்லை. அதனைக் கருத்தில்கொண்டு, பல மாவட்டங்களில் காலியாக உள்ள உட்கட்சிப் பதவிகளை அக்கட்சி வேக வேகமாக நிரப்பி வருகிறது. சென்னை, ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் 1,800 செயற்பாட்டாளர்களை அதிமுக தலைமை நியமித்துள்ளது. "வரும் நாட்களில் மேலும் பல மாவட்டங்களில் காலியாக உள்ள கட்சிப் பொறுப்புகளில் பலர் நிய மிக்கப்படவுள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து, கட்சி நிர்வாகிகள் பலரும் தினகரன் அணிக்கு மாறியதால் அவர்கள் பதவிநீக்கம் செய்யப்பட்டனர். அந்தக் காலி இடங்கள் நிரப்பப்பட வேண்டும், இல்லையேல் அதன் தாக்கம் தேர்தலில் எதிரொலிக்கும் என்று மாவட்டச் செயலாளர்கள் கட்சித் தலைமையை வலியுறுத்தி வரு கின்றனர்," என்று அதிமுக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்ததாக 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' செய்தி கூறுகிறது.
நெருங்கும் தேர்தல்: அவசர அவசரமாக உட்கட்சிப் பதவிகளை நிரப்பும் அதிமுக
1 mins read

