மத்திய அமைச்சரவையில் திமுக இணையும் என ஸ்டாலின் பேச்சு

மத்திய அமைச்சரவையில் திமுக இணையும் என ஸ்டாலின் பேச்சு

1 mins read

தேனி: பாஜக, அதிமுக கூட்டணி உடன்பாடு மூலம் தமிழகத்தின் எந்த உரிமை மீட்கப்பட்டது? என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தேனியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர், ராகுல் காந்தி பிரதமராகும் போது, திமுகவும் மத்திய அமைச்சரவையில் பங்கெடுத்து தமிழகத்திற்கு பல நன்மைகளைத் பெற்று தரும் என்றார். "கடந்த சட்டப் பேரவைத் தேர்தலின் போதே துணை முதல்வர் ஓபிஎஸ் போட்டியிட பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டன. அப்படியிருக்கும்போது ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் தேனி நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளராக ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் நிச்சயம் அறிவிக்கப்பட்டிருக்க மாட்டார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தை வைத்து அதிமுக அரசியல் செய்து வருகிறது," என்றார் ஸ்டாலின்.