தேமுதிக பிரமுகர் பட்டப் பகலில் வெட்டிக் கொலை

தேமுதிக பிரமுகர் பட்டப் பகலில் வெட்டிக் கொலை

1 mins read

சென்னை: தேமுதிக பிரமுகரான பாண்டியன் பட்டப்பகலில், பொது மக்கள் முன்பு படுகொலை செய்யப் பட்ட சம்பவம் பாடி பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 45 வயதான பாண்டியன் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் தேமு திக சார்பாக போட்டியிட்டவர். இந் நிலையில், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை விற்பனை செய்தது தொடர்பாக பாண்டியனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக் கும் தகராறு இருந்து வந்ததாகத் தெரிகிறது. அதன் காரணமாக இப்படுகொலை நிகழ்ந்ததா என விசாரணை நடக்கிறது. நேற்று காலை தனது மகனை பள்ளியில் விட்டுவிட்டு தன் வாக னத்தில் வந்தபோது ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்று வழி மறித்து அரிவாள் உள்ளிட்ட ஆயு தங்களால் தாக்கியதையடுத்து அவர் அங்கேயே உயிரிழந்தார்.