சிதம்பரம்: மதிமுக கூட்டணியை விட்டு வெளியே வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தம்மை வற்புறுத்தியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். சிதம்பரத்தில் நடைபெற்ற திமுக கூட்டணிக் கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், ராமதாசின் இக்கோரிக்கையை தாம் உதாசீனப்படுத்தியதாகவும், அதன் காரணமாகவே பாமக தலைமை தன் மீது வீண் பழி சுமத்தி, சேற்றை வாரி இறைத்து, தூற்றி வருவதாகவும் குறிப்பிட்டார். "மோடி மறுபடியும் பிரதமராக வந்தால் இனிமேல் நாட்டில் தேர்தல் நடக்காது. மாநில கட்சிகளை ஒழிக்க பாஜக அனைத்து வேலைகளையும் செய்துள்ளது," என்றார் திருமாவளவன்.
திருமா: திமுக கூட்டணியை விட்டு வெளியேற ராமதாஸ் வலியுறுத்தினார்
1 mins read

