சேலத்திலும் பாலியல் வன்கொடுமை: இளம் பெண்கள் பாதிப்பு

சேலம்: பொள்ளாச்சி பாலியல் விவகாரம் ஏற்படுத்திய அதிர்ச்சி அலைகள் அடங்குவதற்குள் சேலத்தில் அதேபோன்ற கொடூர சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. ஒரு குறிப்பிட்ட கும்பலானது 90க்கும் மேற்பட்ட இளம் பெண் களை பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்தி இருப்பது அம்பலமாகி உள்ளது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். மேலும், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாகவும், ஒரு சிலரிடம் இருந்து லஞ்சம் பெற்றுக் கொண்டு, வழக்கில் இருந்து விடுவித்திருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
சேலம் மாவட்டம் கொண்டலாம் பட்டி பகுதியில் இரவு நேரத்தில் தனியே செல்லும் பெண்கள், இளம் காதல் ஜோடிகளை வழி மறிக்கும் கும்பலைச் சேர்ந்தவர்கள் நகை, ரொக்கப் பணத்தை பறித் துள்ளனர். பின்னர் தங்களிடம் சிக்கிய இளம் பெண்கள், காதலி களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி உள்ளனர்.
இந்தக் கொடூரத்தை காணொ ளியாகப் பதிவு செய்து, புகைப்படம் எடுத்து, மீண்டும் பலமுறை மிரட்டி பணம் பறிப்பதும் நடந்துள்ளது. பல பெண்களை காதலன் கண் முன்பே சீரழித்திருப்பதும் தெரிய வந்திருக்கிறது.
"சேலம் புதிய பேருந்து நிலை யத்திலிருந்து கொண்டலாம்பட்டி செல்லும் குறுக்குச் சாலையில் பெரிய பாலம் ஒன்று உள்ளது. வண்ணத்துப் பூச்சி வடிவில் அமைக்கப்பட்டுள்ளதால், இப் பாலத்தின் அடியில் இருள் சூழ்ந்து புதர் மண்டிக் கிடக்கிறது.
"சேலம் புதிய பேருந்து நிலை யத்திலிருந்து இரவு நேரத்தில் இப்பாலத்தின் வழியாக இருசக்கர வாகனங்களில் தனியாக வீட் டுக்குச் செல்லும் பெண்களையும், இரவுக் காட்சி திரைப்படம் பார்த்து விட்டு கல்லூரி விடுதிக்குச் செல் லும் காதலர்களையும் குறி வைத்து இக்கும்பல் செயல்பட்டுள்ளது," என்று சமூக ஆர்வலர்கள் தெரி வித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!