தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18ஆம் தேதி பொது விடுமுறை

தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18ஆம் தேதி பொது விடுமுறை

1 mins read

சென்னை: தமிழகத்தில் மக்களவை, சட்டப்பேரவை இடைத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18ஆம் தேதியன்று பொது விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற கருத்தை முன்னிறுத்தியும், வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை அளிக்க இடையூறு இருக்கக் கூடாது என்பதற்காகவும் இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.