புதுடெல்லி: தமிழகத்தில் காலியாக உள்ள மேலும் 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உடனடியாக இடைத்தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளு படி செய்துள்ளது. அவசர கதியில் இடைத்தேர் தலை நடத்த இயலாது என்று தேர்தல் ஆணையம் முன்வைத்த வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. எதிர்வரும் ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர் தலுக்கான வாக்குப்பதிவு நடை பெற உள்ளது. அதனுடன் சேர்த்து தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக் கான இடைத்தேர்தலும் நடக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள மேலும் 3 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18ஆம் தேதியே இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என சில தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருந்ததால் அரவக் குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங் குன்றம் ஆகிய மூன்று தொகுதிக ளுக்கான தேர்தல் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் இதுவரை அறிவிக்கவில்லை. இந்நிலையில் மூன்று தொகுதி களுடன் சம்பந்தப்பட்ட தேர்தல் வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளன. இதன்மூலம் இடைத்தேர்தலை நடத்துவதற்கான தடை நீங்கி உள்ளது. எனவே 18 தொகுதிகளுடன் சேர்த்து இந்த மூன்று தொகுதி களுக்கும் இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என்று திமுக தலைமை வலியுறுத்தியது. இது தொடர்பாக அக்கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஏப்ரல் 18ஆம் தேதியே விடு பட்ட மூன்று தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே திமுகவின் கோரிக்கை.
இடைத்தேர்தல் நடத்த கோரிய மனு தள்ளுபடி
1 mins read

