புதுடெல்லி: ஜீவஜோதி என்ற பெண்ணின் கணவரைக் கொலை செய்த வழக்கில் சரவணபவன் ராஜகோபாலுக்கு, 72, ஆயுள் தண் டனையை நேற்று உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. ராஜகோபால் சரணடைய ஜூலை மாதம் வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. சரவணபவன் ஹோட்டலில் பணிபுரிந்த, வேதாரண்யத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவரது மகள் ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார், கடந்த 2001ஆம் ஆண்டு கொலைசெய்யப்பட்டார். சாந்தகுமாரை கொடைக்கானலுக்குக் கடத்திச்சென்று, கொலை செய்ததாக ராஜகோபால், டேனியல், கார்மேகம், காசி விஸ்வநாதன், உசேன், தமிழ்ச்செல்வன், முரு கானந்தம், சேது, பாண்டுரங்கன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம், ராஜ கோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 55 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப் பளித்தது. மற்ற குற்றவாளிகள் 8 பேருக்கு 7 முதல் 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைத்தது. இதை எதிர்த்து ராஜகோபால் சார்பிலும் விதிக்கப்பட்ட தண்ட னையை மேலும் உயர்த்தி வழங்கக் கோரி காவல்துறை சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை விசாரித்த உயர் நீதிமன்றம், ராஜகோபாலுக்குக் கீழ் நீதிமன்றம் விதித்த தீர்ப்பை, ஆயுள் தண்டனையாக மாற்றிய தோடு, 55 லட்ச ரூபாய் அபராதத் தையும் உறுதி செய்தது. இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில், ராஜகோபால் சார்பில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விசாரணை முடிவுற்று நேற்று தீர்ப்பு அளிக் கப்பட்டது. அதில், உயர் நீதிமன்றம் ராஜகோபாலுக்கு விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ராஜகோபாலின் உடல்நிலை காரணமாக அவரது தரப்பு முன் வைத்த கோரிக்கையை ஏற்று, வருகிற ஜூலை மாதம் 7ஆம் தேதி சரணடையுமாறு ராஜ கோபாலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சரவணபவன் நிறுவனத்தில் வேலை பார்த்தவரின் மகளான ஜீவஜோதி என்ற பெண்ணின் அழகில் மயங்கி அவரை மூன் றாவது மனைவியாக்கிக்கொள்ள ராஜகோபால் திட்டமிட்டதாகவும் ஆனால் ஜீவஜோதியோ பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரைக் காத லித்து அவரையே திருமணமும் செய்து கொண்டதாகவும் அப் போது செய்திகள் வெளியாயின. ஜீவஜோதியை அடைந்தே ஆக வேண்டும் என்ற வேகத்தில் அவரின் கணவரான சாந்தகுமாரை ராஜகோபால் கொலை செய்துவிட்ட தாகத் தெரியவந்தது.
சரவணபவன் ராஜகோபால் ஆயுள் தண்டனை உறுதி
2 mins read
-

